மது பாட்டில்கள் விற்பனை செய்த 4 நபர்கள் கைது. 6,600 மதுபாட்டில்கள் பறிமுதல்

கொரானா தொற்று நோயை தடுக்கும் வகையில் தமிழக அரசு மதுபானபாா் கடைகளை 31.03.2020-ம் தேதி வரை திறக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். ஐந்து காவல் சரக அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமுலாக்க பிரிவு காவல் அதிகாரிகளும் இணைந்து ரோந்து பணி செய்தபோது 4 நபர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்களை கைது செய்து 6,600 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு TATA ACE, ஒரு HERO HONDA SPLENDER ஆகிய இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!