சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் களப் பயணமாக சேது பாஸ்கரா விவாசய கல்லூரிக்கு சென்று சேற்றில் இறங்கி நாற்று நடுதல் செய்தனர்.5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் விவாசய கல்லூரிக்கு களப் பயணமாக சென்றனர் .கல்லூரி பண்ணை மேலாளர் கருப்பு ராஜ் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் .விவசாய கல்லூரியில் ஆட்டு பண்ணை,கோழி பண்ணை,பன்றி பண்ணை,புறா பண்ணை,மீன் பண்ணை ஆகியவைகளையும்,பூச்சியியல் துறை ஆய்வகம்,மண் அறிவியல் ஆய்வகங்களையும், வெண்டிக்காய்,பாகற்காய்,புடலங்காய் போன்றவை எவ்வாறு பறிப்பது என்பது தொடர்பாகவும் விவசாய பிரிவு அலுவலர் விக்னேஷ்,பண்ணை உதவியாளர் சகாயம் ஆகியோர் நேரில் கற்று கொடுத்தனர்.நவீன வேளாண்மை முறையில் தக்காளி பயிர் செய்வது தொடர்பாகவும் மாணவர்கள் கற்று கொண்டனர்.4500 கிலோ நெல் பாதுகாப்பக வைக்கப்பட்டுள்ள பண்டைய கால நெல் சேமிப்பு பாதுகாப்பு முறையான தானிய குதிர் தொடர்பாகவும் மாணவர்கள் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.சேற்றில் இறங்கி சந்தோஷமாக நாத்து நடுதல் செய்து கற்று கொண்டனர் .மாணவர்கள் பார்வையிட்ட இடங்களை பற்றி மாணவர்கள் அய்யப்பன்,வெங்கட்ராமன்,சிரேகா,கீர்த்தியா,ஜோயல்ரொனால்ட்,நதியா உட்பட பல மாணவர்களும்,ஆசிரியர்களும் பேசினார்கள்.பள்ளியின் சார்பாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.ஆசிரியர் கருப்பையா ,ஸ்ரீதர் மாணவர்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு கல்லூரியின் சார்பாக வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வேளாண்மை கல்லூரிக்கு மாணவர்களை களப்பயணம் அழைத்து செல்வது குறித்து கூறியதாவது : இளம் மாணவர்களாகிய எங்கள் பள்ளி மாணவர்களுக்கு இப்போதே விவசாயம் தொடர்பாகவும்,விவசாயம் செய்வது குறித்து அறிந்து கொள்ளவும் ஏதுவாக தொடர்ந்து நான்காவது ஆண்டாக வேளாண்மை கல்லூரியின் தாளாளர் சேது குமணன் ஒத்துழைப்புடன் களப்பயணமாக அழைத்து வருகிறோம்.இதன் மூலம் மாணவர்கள் விவசாயம் சார்ந்த அனைத்து விவரங்களையும் கற்று கொள்கின்றனர்.எதிர்காலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை வளர்க்கிறோம் என்று கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















