கடத்தப்பட்ட குழந்தையை 24 மணிநேரத்தில் மீட்ட காவல்துறை

28.02.2020-ம் தேதி அதிகாலை சுமார் 04.00 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் பீச் மைதானம் அருகே கும்பகோணத்தை சேர்ந்த சினேகா  தனது 8 மாத பெண் கைக்குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த போது குழந்தை கடத்தப்பட்டதாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வினோத் சாந்தாராம்¸ அடையார் சரக உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்த காவல்துறையினருக்கு நான்கு பேர் கொண்ட கும்பல் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் நான்கு நபர்களையும் கைது செய்து விசாரணை செய்தனர். இதில் கடத்தப்பட்ட குழந்தை 2 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து குழந்தையை வாங்கிய நபர்; கைது செய்யப்பட்டு குழந்தையை காவல்துறையினர் மீட்டனர். மீட்க்கப்பட்ட குழந்தையினை அடையார் காவல் துணை ஆணையர்  பகலவன்¸  தாயாரிடம் ஒப்படைத்தார். மன நெகிழ்ச்சியுடன் குழந்தையை பெற்றுக்கொண்ட தாயயர் காவல்துறையினருக்கு மகிழ்ச்சி கலந்த நன்றியினை தெரிவித்தார். இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதன்¸  வெகுவாக பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!