தமிழ்நாடு காவல்துறையால் புதிதாக WhatsApp குழு துவக்கம்

தமிழ்நாடு காவல்துறையின் WhatsApp குழுவில் இணைய தங்களது WhatsApp எண்ணிலிருந்து JOIN என டைப் செய்து 94981-11191 என்ற எண்ணிற்கு அனுப்பும் குறுஞ்செய்தியின் மூலம் தங்களின் எண் பதிவுசெய்யப்பட்டு காவல்துறை சம்மந்தமான செய்திகளை அனைத்து மக்களும் உடனுக்குடன் பெற முடியும். இதுவரை சுமார் 10,000- க்கும் மேற்பட்ட நபர்கள் இணைந்துள்ளார்கள். தமிழ்நாடு காவல்துறையின் WhatsApp குழு சமூக ஊடக மையம் காவல் ஆய்வாளர்  அம்பேத்கர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர்  விக்ரமன் மேற்பார்வையில் 12 காவலர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றது. WhatsApp மூலமாக பகிரும் வதந்தி செய்திகளின் உண்மை தன்மை மற்றும் காவல்துறை தொடர்பான செயல்பாடுகள் குறித்த தகவல்கள் அனைத்தும் இதில் வழங்கப்படுகின்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!