கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் எமனுக்கு கண்டனம் தெரிவித்து திமுகவினர் போஸ்டர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களில் ஆட்சியை பல்வேறு கட்டங்களாக திமுக சாடியும், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியினர் விமர்சனம் செய்தும் தமிழக அரசிற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில் மதுரையில் தற்போது வடக்குமாசி வீதியை சேர்ந்த 51 வது வட்ட திமுகவை சேர்ந்த பிரதிநிதி அடைக்கலம் என்பவரது தந்தை அய்யாவு என்பவர், இறப்பை அனுசரிக்கும் வகையில் எமனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சிங்கத்தை சிறைபிடித்து சென்ற எமனுக்கு மாபெரும் கண்டனம் என்ற கண்ணீர்அஞ்சலி போஸ்டர் மதுரையில் ஒட்டப்பட்டுள்ளது ஆச்சர்யபடுத்தும் வகையில் உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!