இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு துவங்குவது மற்றும் தபால் நிலையங்கள் செயல்படுவது பற்றிய கருத்தரங்கம் பள்ளி முதல்வர் திரு.எஸ்.நந்தகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக இராமநாதபுர மாவட்ட தலைமை தபால் நிலைய அதிகாரி திரு.சீதாராமன் கலந்து கொண்டு சேமிப்பு கணக்கு தபால் நிலையங்களில் பத்து வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு மாணவனும் ரூ.50 செலுத்தி, இரண்டு புகைப்படம் மற்றும் ஆதார் ஜெராக்ஸ் கொடுத்து சேமிப்பு கணக்கை துவக்கி பணத்தை தங்கள் கணக்கில் சேமித்து கொள்ளலாம். இது உங்களுக்கு பிற்காலத்தில் மேற்படிப்புக்கு உதவியாக இருக்கும். மேலும் 18 வயது பூர்த்தியடைந்து சேமிப்பு கணக்கு துவங்கும் ஒவ்வொருவருக்கும் சேமிப்பு புத்தகத்துடன் கார்டு வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் மாணவர்கள் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை தொடர ரூ.100 பதிவு கட்டணமாகவும் குறைந்தபட்சம் ரூ.200 தபால் தலை சேமிப்புக்கு அட்வான்சாகவும் செலுத்தி தபால் தலை சேகரிக்க பதிவு செய்தால் ஒவ்வொரு முறையும் தபால் தலை அரசு வெளியீடு செய்யும் பொழுது முகவரிக்கு புதிய தபால் தலை அரசு அனுப்பிவைக்கும். நமது அட்வான்ஸ் முடிந்துவிட்டால் மேற்கொண்டு அட்வான்ஸ் தொகை செலுத்தி புதிய தபால் தலைகளை சேகரித்து கொள்ளலாம்.
பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் 55 மாணவர்கள் இராமநாதபுரம் தலைமை தபால் நிலையம் சென்று நேரடியாக தபால் நிலையம் செயல்படுவது பற்றி விரிவான விளக்கத்துடன் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.
மாணவர்கள் My Stamp என்ற திட்டத்தின் கீழ் தங்களுடைய குடும்பத்தில் நடைபெற உள்ள திருமணம், பிறந்தநாள், திருமணநாள்ää கிரகபிரவேசம் போன்ற நிகழ்ச்சியின் புகைப்படத்தை தபால் தலையாக வெளியிட பதினைந்து தினத்திற்கு முன்பே புகைபடத்துடன் ரூ.300 கட்டணம் செலுத்தினால் ரூ.5 மதிப்புள்ள 12 தபால் தலைகள் தங்கள் இல்லத்திற்கு வந்து சேரும்.
Tracking – பதிவு தபால் ஒருவா முகவரிக்கு வெளியூருக்கோ, வெளிமாநிலத்திற்கோ, வெளிநாட்டிற்கோ அனுப்பினால் அந்த தபால் எந்த இடத்தில் தற்பொழுது உள்ளது அல்லது அந்த தபால் முகவரிக்கு சென்று அடைந்து விட்டதா என்பதனை அறிந்து கொள்ளும் பதிவு தபால் வசதியும் உள்ளது என தெரிவித்தார்.
மேலும் பெற்றோர்களுக்கு வருமான வரி சலுகை பெற சேமிப்பு பத்திர வசதி செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். மாணவர்கள் தபால் நிலையத்தை நேரில் பார்வையிட்டு பல அரிய கருத்துக்களை அறிந்து பயன் அடைந்தனர் மேலும் சேமிப்பு கணக்குகள் உருவாக்க உறுதி எடுத்துக் கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















