மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுள்ளார்.மதிமுக நிர்வாகிகள் குழு கூட்டத்தின் முடிவில் ராஜினாமா முடிவை துரை வைகோ வாபஸ் பெற்றார்.முதன்மை செயலாளர் துரை வைகோவின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படாது. அதேபோல், மல்லை சத்யாவையும் கட்சியை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.மேலும், துரை வைகோ மல்லை சத்யா இருவரும் பழைய நிகழ்வுகளை மறந்துவிட்டு இணைந்து பணியாற்ற கைகோ அறிவுறுத்தி உள்ளார்.மதிமுக நிர்வாக கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியதாலும், வைகோவின் அறிவுறுத்தலையும் ஏற்று துரை வைகோ ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.கட்சிக்கா ஒன்றிணைந்து பணியாற்றுவோதம் என துரை வைகோ, மல்லை சத்யா அறிவித்துள்ளனர்.

You must be logged in to post a comment.