திருச்சியில் இருந்து மதுரை வரை; வைகோவின் நடைபயணம் தொடக்கம்..!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இன்று சமத்துவ நடைபயணத்தை தொடங்குகிறார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். முன்னதாக தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.அந்த தொடக்க விழா அழைப்பிதழில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படம் அச்சிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு நேரடி தொடர்பு இருந்தது வெட்டவெளிச்சமான நிலையில் தொடர்ந்து அந்த அமைப்பை காங்கிரசார் எதிர்த்து வருகிறார்கள்.இதற்கிடையே நடைபயண அழைப்பிதழ் வழங்கியபோதே காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று திருச்சியில் நடைபெறும் வைகோ நடைபயண தொடக்க விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.இதில் மாநில நிர்வாகிகள் மட்டுமல்லாமல், மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை. முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சியிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. இது தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!