மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் இன்று காலை 8 மணி அளவில் பெட்ரோல் ஏற்றி வந்த ரயிலில் டேங்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் சோழவந்தான் வழியாக செல்லும் ரயில்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றதால்
ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர் இன்று காலை 8 மணி அளவில் சோழவந்தான் ரயில் நிலையம் வழியாக பெட்ரோல் ஏற்றி வந்த சரக்கு ரயில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் சோழவந்தான் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது உடனடியாக சோழவந்தான் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு துறையினர் வந்து ரயிலில் ஏற்பட்ட கசிவை சரி செய்ய முயற்சி செய்தனர் அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை சென்ற பயணிகள் ரயிலும் நாகர்கோவிலில் இருந்து ஈரோடு சென்ற ரயிலும் அடுத்தடுத்த மார்க்கத்தில் வந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக இரண்டு மார்க்கத்திலும் வந்து ரயில்களை ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்து ரயில் தண்டவாளத்தில் நிறுத்தினர் இதனால் சோழவந்தான் வழியாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது பின்னர் மதுரையில் இருந்த ரயில்வே பொறியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து பொறியாளர்கள் வந்து ரயிலில் ஏற்பட்ட கசிவை சரி செய்தனர் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது சரக்கு ரயிலில் ஏற்பட்ட கசிவால் சோழவந்தான் ரயில் நிலையத்தில் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதனால் ரயிலில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் மற்றும் மதுரை திண்டுக்கல் ரயிலில் பயணம் செய்த பயணிகள் நாகர்கோவில் ஈரோடு ரயிலில் பயணம் செய்த பயணிகள் சிறிது நேரம் பதட்டமடைந்தனர் பின்னர் ஒரு வழியாக நிலைமை சீரானவுடன் ரயில்கள் அனைத்தும் புறப்பட்டு சென்றது
