
மேட்டுப்பாளையத்தில் நாய்களுக்கான தடுப்பூசி முகாம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் வசிக்கும்
பொதுமக்கள் தங்கள் இல்லத்தில் உள்ள நாய்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மேட்டுப்பாளையம் நகராட்சி உடன் இணைந்து தமிழ்நாடு அரசு உத்தரவின்படி “WVS” தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு கால்நடை துறை நடத்தும் “நாய்களுக்கான தடுப்பூசி முகாம்” செப்டம்பர் 29 ம் தேதி முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை மேட்டுப்பாளையம் நகராட்சிப்பகுதியில் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமின் மூலம் சொந்தமாக நாய் வளர்ப்பவர்கள் மற்றும் தெரு நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன
இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு நகராட்சி நிர்வாகம் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தடுப்பூசி செலுத்துவதனால் ராபிஸ் போன்ற நோய்கள் தொற்றுக்கள் பரவாதவாறு தங்கள் செல்லப் பிராணிகளை பாதுகாத்துக் கொள்ளலாம்
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் கீழ்க்கண்ட நாட்களில் வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்று குழுக்களாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
29/9/25-திங்கட்கிழமை
வார்டு எண்:15,16,24,25,26,27,
31,32,33 ,மேலும் 30/9/25 செவ்வாய்க்கிழமை வார்டு எண்: 1,2,3,4,5,11,12,13,14,17, மற்றும்
1/10/25 புதன்கிழமை
வார்டு எண்:6,7,8,9,10,18,19 வருகின்ற
2/10/25 வியாழக்கிழமை அன்று
வார்டு எண்: 20,21,22,23,28,29,30
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா அறிவித்துள்ளார்
மேலும் நகராட்சி நிர்வாகத் தொடர்பு
அலைபேசி எண்கள்/8610247559 /
6379767052

You must be logged in to post a comment.