கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரவல் காரணமாக விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவு மூடல்..

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விருதுநகர் அரசு தலைமை மருத்துவ மனையில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது. விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இதன் எதிரே மகப்பேறு மருத்துவ சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது.இச்சிகிச்சைப் பிரிவில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இங்கு சிகிச்சை பெற்ற 8 கர்ப்பிணிகள் பிரசவம் பார்த்த 2 பெண் மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்கள் உள்ளிட்ட 14 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விருதுநகர் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு இன்று திடீரென மூடப்பட்டது.

மேலும், பலருக்கு இந்த வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மகப்பேறு சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது.தற்போது சிகிச்சையில் உள்ள தாய்மார்கள் சிகிச்சை முடிந்த பின் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். பிரசவத்திற்கு வரும் தாய்மார்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். மகப்பேறு சிகிச்சைப் பிரிவு அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி மூலம் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படும் என விருதுநகர் அரசு மருத்துவமனை அதிகாரிகள். தெரிவித்து உள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!