பொதுமக்கள் நலன் கருதி தனியார் இடத்தை தூய்மை செய்யும் பணியில் இறங்கிய மஹ்தூமியா சமூக நல அமைப்பு (MASA)…

கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியல் தனியாருக்கு சொந்தமான இடம் பராமரிப்பு இல்லாமல் சுகாதார கேடு விளைவிக்கும் வண்ணம் இருந்துள்ளது. இது சம்பந்தமாக சம்பந்தமாக நகராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மஹ்தூமியா சமூக நல அமைப்பினர் (Masa Acitvities) இடத்தின் உரிமையாளரை அணுகியுள்ளனர்.

இதை தொடர்ந்து அவ்விடத்தின் உரிமையாளர் மஹ்தூமியா அமைப்பினரை அவ்விடத்தை சுத்தம் செய்து கொள்ள அனுமதியளித்துள்ளார்.

இதை தொடர்ந்து இன்று (25/09/2020) இரவே மஹ்தூமியா அமைப்பின் தலைவர் அஹமது முகைதீன் முன்னிலையில் தேவையான இயந்திரங்களின் துணையோடு சுத்தம் செய்யும் பணியில் இறங்கினர்.

இது சம்பந்தமாக மஹ்தூமியா நிர்வாகி கூறுகையில், “மக்களின் நலன் கருதி இந்த இடத்தை நாங்கள் தூய்மை செய்து வருகிறோம், இனி இதை  தொடர்ச்சியாக இவ்விடத்தை தூய்மையாக வைத்து கொள்வது பொதுமக்களின் கடமை” என பொதுநல அக்கறையுடன் கூறி முடித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!