கீழக்கரை மஹ்துமிய சமூக நல அமைப்பின் (MASA) சார்பில் மதுவுக்கு எதிராக சைக்கிள் பேரணி……

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மஹ்துமிய சமூக நல அமைப்பின் (MASA) சார்பில் மதுவுக்கு எதிராக சைக்கிள் பேரணி நடைபெற்றது. சைக்கிள் பேரணிக்கு உறுதுணையாக இருந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மஹ்துமிய மேல்நிலை பள்ளி தாளாளர் இஸ்திகார் ஹசன் இன்ஜினியர் கபீர், கீழக்கரை டைம்ஸ் ஹமீது யாசின், தெற்கு தெரு ஜமாத் செயலாளர் செய்யது இப்ராஹிம், ஜுமால், நசுருதீன், மீரான், தலைமையில் இப்பேரணி நடைபெற்றது.

கீழக்கரை சார்பு ஆய்வாளர் செல்வராஜ் பச்சைக்கொடி அசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியை மஹ்துமியா சமூக நல அமைப்பின் தலைவர் அகமது மைதீன் ஏற்பாடு செய்தார். இதில் பழைய குத்பா பள்ளி ஜமாஅத் செயலாளர் மூர் ஜெயினுதீன் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் மூர் ஹசனுதீன் கிழக்குத் தெரு ஜமாஅத் அஜிகர் களந்து கொண்டனர். சைக்கிள் பேரணி கீழக்கரை மீன் கடைத்தெரு பழைய ஜும்மா பள்ளியில் ஆரம்பம் செய்து கீழக்கரை பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலை, நடுத்தெரு, சின்னக்கடை தெரு, தெற்குத் தெரு, வழியாகச் சென்று வடக்குத்தெரு மனல்மேட்டில் முடிவடைந்தது. இப் பேரணியை பொதுமக்கள் வரவேற்று ஆதரவு தெரிவித்தனர் இப்பேரணியில் கீழக்கரை தலைமை காவலர் இளமுருகன், காவலர் தினகரன் உள்ளிட்டேர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!