மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் மறியல்: 992 பேர் கைதாகி விடுதலை..

ராமநாதபுரம், செப்.7 – விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசு, வேலை வாய்ப்பு உருவாக்காத மத்திய அரசுக்கு எதிராக ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராடினர்.

இது தொடர்பாக மாவட்டம் முழுவதும்  390 பெண்கள் உள்பட  992 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டனர். ராமநாதபுரம் தலைமை தபால் நிலையம் முன் மறியலுக்கு முயன்ற மார்க்சிஸ்ட் மாவட்ட செயலர் காசிநாதரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருவேல், தாலுகா செயலர் செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், கல்யாணசுந்தரம் உள்பட 39 ஆண்கள், 20 பெண்கள் என 59 பேர் கைதாகினர்.
பரமக்குடி ரயில் ஸ்டேஷனில் ரயில் மறியலுக்கு மாநிலக் குழு உறுப்பினர் பாஸ்கரன், தாலுகா செயலர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, முரளி உள்பட 192 ஆண்கள், 133 பெண்கள் உள்பட 326 பேர் கைதாகினர்.

சாயல்குடியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணகி, தாலுகா செயலர் முத்துசாமி தலைமையில், சிவன் பெருமாள், நவநீதகிருஷ்ணன், பிரான்சிஸ் உட்பட பலர் கைதாகினர்.

ராமேஸ்வரம் தபால் நிலையம் முன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், தாலுகா செயலர் சிவா, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆரோக்ய நிர்மலா, ஜஸ்டின், ராமச்சந்திர பாபு உள்பட 180 ஆண்கள் 125 பெண்கள் என 305 பேர் கைதாகினர். முதுகுளத்தூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசன், தாலுகா செயலர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் உட்பட 75 ஆண்கள், 51 பெண்கள் என 126 பேர் மறியல் செய்து கைதாகினார். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!