மதுரை தொகுதியில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில், சச்சிதானந்தம்போட்டி!- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு..

லோக்சபா மதுரை தொகுதியில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில், சச்சிதானந்தமும் போட்டியிடுவார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்து உள்ளது.

தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், மதுரை தொகுதியில் மீண்டும் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தமும் போட்டியிடுவார்கள் என கூறியுள்ளார்..

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!