இராமநாதபுரத்தில் நீத்தார் நினைவு நாள் வீர வணக்க அஞ்சலி இன்று (21/10/2018) நடைபெற்றது. இதில் காவல் துறையில் பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இராமநாதபுரம் ஆயுதப்படை வளாகம், கமுதி தனி ஆயுதப்படை மைதானங்களில் நடைபெற்றது. காவல் பணியின்போது வீர மரணம் அடைந்தோர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இராமநாதபுரம் ஆயுதப்படை போலீசார் சார்பில் தேசப்பற்று மற்றும் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த நபர்களை கவுரவிக்கும் வகையில் தேசப்பற்று நாடகம் நடந்தது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பணியின்போது உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்தினருக்கு ராமநாதபுரம் சரக காவல் துறை துணை தலைவர் என். காமினி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். நீத்தார் நினைவு தின கவிதை, கட்டுரை போட்டிகளில் வென்றோருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ், காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் பரிசு வழங்கினர்.
இராமநாதபுரத்தில் நடந்த நீத்தார் நினைவு தின கவிதை போட்டியில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி ஏ. காயத்ரி, ராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி எம்.நிவே தீபிகா, உப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி எம். யோகா, ஆர்எஸ் மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி பி. அபி செல்வம், சன வேலி அரசு மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் எம்.அபிமன்யு, ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி எஸ்.மகாலட்சுமி, கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் எம்.சதீஷ்குமார், மேலாய்குடி அரசு மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி பி.கல்பனா, புதுவலசை அரபி ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி என்.பிரித்திகா, சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் எம் கிரி ஆகியோர் வென்றனர்.
கட்டுரைப் போட்டியில் இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி ஆர்.எம். மோகன தாரணி, தங்கச்சிமடம் ஹோலி கிராஸ் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி சி. அம்சல்யா, இராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி என். வரலட்சுமி, கீழக்கரை ஹமீதியா மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் எஸ். லிங்கதுரை, புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி எஸ்.அருஷா, முத்துப்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி பி.ரித்திகா, முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி ஜெ. ஷகிரா தஷ்னீம், சனவேலி அரசு உயர்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் பி.ஹரிஹரசுதன், சாத்தான்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி யாமினி, உலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி தர்ஷிகா ஆகியோர் பரிசு வென்றனர்.
காவல் துறையில் பணியின் போது உயிர் நீத்த போலீசார் குடும்பத்தினருக்கு இராமநாதபுரம் சரக காவல் துறை துணை தலைவர் என். காமினி நினைவு பரிசு வழங்கினார். போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் பரிசு வழங்கினர். உச்சிப்புளி பருந்து கடற்படை விமான நிலைய கேப்டன் கே.வி.கே கோஷனி, மண்டபம் இந்திய கடலோர காவல் படை கமாண்டன்ட் எம். வெங்கடேசன், ராமநாதபுரம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் என் கண்ணன் , காவல் துணை கண்காணிப்பாளர்கள் எம்.நடராஜன் (இராமநாதபுரம் ), எம். மகேஷ் (இராமேஸ்வரம் ), எம். விஜயகுமார் (திருவாடானை), ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் (பயிற்சி) ஆர்.கோகுல் கிருஷ்ணன், இராமநாதபுரம் ஊர்க்காவல் படை வட்டார தளபதி டாக்டர் எம்.ஜி ஜபருல்லா, தனிப் பிரிவு ஆய்வாளர் ஏ.ஜான் பிரிட்டோ, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், மாரியப்பன் (போக்குவரத்து), முத்துராமலிங்கம் (ஆயுதப்படை), நாகசாந்தி (மனித வணிக கடத்தல் தடுப்பு பிரிவு), சார்பு ஆய்வாளர்கள் ரோஸெலெட் (ஆயுதப்படை), ஆயுதப்படை காவலர்கள் விஸ்வநாதன், சோனியா ஆகியோர் பங்கேற்றன். கமுதி தனி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மதுவிலக்கு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ். வெள்ளைத்துரை, பரமக்குடி மது விலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பாஸ்கரன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் உதயசூரியன் (முதுகுளத்தூர்), இன்ஸ்பெக்டர்கள் சரவணன் (கமுதி), லட்சுமி (பெருநாழி), ஜான்சிராணி (அபிராமம்), தேவ சங்கரி ( கமுதி), கமுதி தனி ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











