இராமநாதபுரம் பட்டணம்காத்தானில் விசை படகு நாட்டு படகு மீனவர்களுக்கான உபகரண கருவிகள் கடை தமிழ்நாட்டில் முதன் முறையாக திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மகேந்திரா அன் மகேந்திரா கம்பேனி பலவிதமான இயந்திரங்களை தயாரித்து வருகின்றன, தற்போது விசை படகு மீனவர்களுக்கு ஆழ்கடல் சென்று மீன் பிடிக்க புதிய அதி நவீன 180 முதல் 300 குதிரை திறனில் இயங்கக் கூடிய இயந்திரத்தை அறிமுகம் செய்து உள்ளன. இந்த மரைன் இன்ஜின் இராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, கண்ணியாகுமரி மீனவர்களுக்கு பயன்படும்.
கேரளாவில் கிடைத்து வந்த இன்ஜின் இப்பொழுது இராமநாதபுரத்திலேயே கிடைப்பதால் தென் மாவட்ட மீனவர்களுக்கு சிரமம் இல்லாமல் ஆர்டர் செய்த உடன் உடனடியாக கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் ஆழ்கடல் சென்று தங்கி அதிக அளவில் மீன்களை பிடிக்க வசதியாக உள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த வகையான கடல் சார் இன்ஜின் இராமநாதபுரத்தில் கிடைப்பதால் அலச்சல் குறைகிறது என மீனவ சங்க தலைவர் தெரிவித்தார். மேலும் குறைந்த விலையிலும், அரசு வழங்கும் மானிய விலையிலும் கிடைக்கிறது. இந்த வணிகத்தை மீன்வளத் துறை துணை இயக்குநர் ஐசக் ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவருடன் மகேந்திரா பொது மேலாளர் செந்தில்குமரன் குத்துவிளக்கேற்றி விற்பனையை துவக்கி வைத்தார். அவருடன் மேலாளர் அஸ்வின் ஜெக்கப்பால், தாஸ் தியா பிளஸ் மற்றும் மீனவர்கள் மீனவ சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












