திருமங்கலத்தில் மார்கழி உற்சவ விழா – ஏராளமான பெண்கள் கலந்துகொண்ட கோலப் போட்டி – 3d கோலம் உட்பட வண்ண, வண்ண கலர் கோலங்கள் போட்டு அசத்திய பெண்கள்..
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் உள்ள என்.ஆர். எம். பள்ளி வளாகத்தில், மார்கழி உற்சவ விழாவை ஒட்டி, பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது . இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இப் போட்டியில் 3d கோலம், கோபுர கோலம் உட்பட பல்வேறு வகையான வண்ண, வண்ண கோலங்கள் , பெண்கள் தங்களது திறனை வெளிப்படுத்தும் வகையில் கோலமிட்டனர்.
அவர்களுக்கு NRM பள்ளி சார்பில், ரொக்க பரிசு வழங்கப்பட்டன.மார்கழி உற்சவ விழாவையொட்டி 3 நாட்கள் நடைபெற்ற திருமங்கலத்தில் திருவையாறு என்ற தலைப்பில், NRM பள்ளி சார்பில் நடைபெற்ற தசாவதார நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுரை சங்கீத சமாஜ் பள்ளி மாணவிகள், திருவையாற்றில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி போன்று, நாட்டிய அஞ்சலி நடத்தி பார்வையாளர்களை அசத்தினர்.
செய்தியாளர், வி. காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









