தென்காசியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிற்றாற்றின் தூய்மையை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டப் போட்டி நடந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நகர் மன்ற தலைவர் சாதிர் பரிசுகளை வழங்கினார். தென்காசி நகர திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாரத்தான் ஒட்டப் போட்டிகள் செப்.24 ஞாயிற்றுக் கிழமை நடந்தது. தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு இருந்து புறப்பட்டு ஆயிரப்பேரி கிராமம் வரை சென்று மீண்டும் நீதிமன்றம் வரையில் 5.6 கி.மீட்டர் தூரம் வரையிலான இந்த மாரத்தான் போட்டியில் 1000 பேர் பங்கேற்றனர். இந்த மாரத்தான் ஒட்டப் போட்டியை தென்காசி நகர்மன்றத் தலைவரும், திமுக நகரச் செயலாளருமான சாதிர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரியவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தங்க நாணயம்,2ஆம் பரிசாக ரூ.2000, 3ஆம் பரிசாக ரூ.1000, 4ஆம் பரிசாக 10 பேருக்கு ரூ.500. இதே போன்று 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தங்க நாணயமும், 2ஆம் பரிசாக ரூ.1000, 3ஆம் பரிசாக ரூ 700, 4ஆம் பரிசாக 10 பேருக்கு ரூ.500 பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பெரியவர்களுக்கான போட்டியில் கண்டு கொண்டா மாணிக்கம் பகுதியை சேர்ந்த பசுபதி முதலிடத்தையும், நெல்லையை சேர்ந்த ஆனந்த் 2ஆம் இடத்தையும், தென்காசியை சேர்ந்த கண்ணன் 3ஆம் இடத்தையும், பாவூர்சத்திரத்தை சேர்ந்த அசோக்குமார் 4வது இடத்தையும் பெற்றனர். 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் ஹரி கவுசிக் முதலிடத்தையும், இராஸ் அகமது 2வது இடத்தையும், முகமது அல்தமீம் 3ஆம் இடத்தையும், வெங்கடேஷ் 4ஆம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நகர் மன்றத் தலைவர் சாதிர் பரிசுகளை வழங்கினார். இந்த மாரத்தான் போட்டியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பையா, காவல் ஆய்வாளர் பாலமுருகன், நகர்மன்ற உறுப்பினர் முகம்மது ராசப்பா, சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் இசக்கி ரவி, வர்த்தக சங்க செயலாளர் ராஜா, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












