வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் இன்று சர்வதேச கலாச்சார திருவிழா இன்று (14/02/2019) துவங்கியது. இதில் மாணவர்களின் கனவுகளுக்கு மெருகேற்றுதல் என்ற தலைப்பை வலியுறுத்தும் வண்ணம் காட்பாடி வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திலிருந்து 10கிலோமீட்டர் தூரம் வரை உள்ள மாரத்தான் ஓட்டத்தில் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
இப்பல்கலைகழகத்தில் இன்று முதல் சர்வதேச விளையாட்டு மற்றும் கலாச்சார போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் சர்வதேச அளவில் 700 கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களை சேர்ந்த 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதன் துவக்கமாக நடைபெற்ற இந்த மாரத்தானில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைகழகம் முதல் சித்தூர் பேருந்து நிலையம் வழியாக விருதம்பட்டு சென்று மீண்டும் இப்பல்கலைகழகத்தை வந்தடைந்தது.
இதனை பல்கலைகழக துணை தலைவர் சேகர் துவங்கி வைத்தார். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்று ஓடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









