உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவு தினத்தையொட்டி கோவில்பட்டியில் இருந்து அவர் பிறந்த ஊரான வையம்பாளையத்துக்கு பாரதிய கிசான் சங்கம் சார்பில் நினைவு ஜோதி பயணம் தொடங்கியது.
இதையொட்டி கோவில்பட்டி பயணியர் விடுதியில் நாராயணசாமி நாயுடு உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ரெங்கநாயகலு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.பரமேஸ்வரன், தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் என்.சிவன்ராஜ் ஜோதி பயணத்தை தொடங்கி வைத்தார். ஜோதி பயணம் சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, திண்டுக்கல், பழனி வழியாக வையம்பாளையம் செல்கிறது. அங்கு நாளை (21-ம் தேதி) காலை நாராயணசாமி நாயுடு சமாதியில் ஜோதி வைக்கப்பட உள்ளது.
செய்தியாளர்:- அஹமது


You must be logged in to post a comment.