அதிமுக – பாஜக கூட்டணி தேர்தல் நாடகம் ஏமாற்று வேலை . அதிமுக ஜெயலலிதாவுடன் செத்துப் போயிற்று. திமுக கருணாநிதியுடன் போய்விட்டது. தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதி அனேகமாக எனக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். நான் தேர்தலில் நின்றால் மரண அடி தான். எந்தத் தொகுதியில் நின்றாலும் எனக்கு எதிராக பணம் கொடுத்தால் நேராக திகார் சிறைக்கு அனுப்பி விடுவேன். பணம் கொடுத்து வாக்கு வாங்குவதற்கு கூட்டணி எதற்கு. தற்போது நடந்து நடைபெற்று வருவது பினாமி ஆட்சி முதல்வரை கொன்றுவிட்டு ஆட்சி நடத்தி வருகிறார்கள். பிரதமராகவும் ஒரு தமிழன் தான் வந்து உட்கார வேண்டும். அப்பதான் இந்த நாடு உருப்படும். கடந்த 16 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் அகழ்வாராய்ச்சி பண்ணார்களே அதை ஏன் ப்ளோரிடா வுக்கு அனுப்பாமல் இருக்கிறார்கள். காங்கிரசும் சரி பாஜகவும் சரி கூட்டுக் களவாணிகள் தமிழர்களின் மாண்பு தெரிந்துவிடும் என்பதற்காக இருட்டடிப்பு செய்கிறார்கள்.
கீழடி விவகாரம் என்ன ஆகிவிட்டது அமைச்சர் மா.ப பாண்டியராஜன் என்ன செய்கிறார். ஏன் அனுப்ப வில்லை தமிழர்களின் புகழ் உலகம் முழுவதும் தெரிந்துவிடும் என்பதற்காகவா. 2 லட்சம் தமிழர்களை கொன்று விட்டார்கள் நான் எம்பியாக செல்வேன் ராகுல் காந்தியைப் பார்த்து கேள்வி கேட்பேன். ஏழு பேரை விடுதலை செய்து பரிகாரம் தேடிக் கொண்டால் இடைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு சீட்டாவது கிடைக்கும். காங்கிரஸும் – பாஜகவும் தமிழின விரோதிகள் தான் 7 பேர் விடுதலை ஏன் பண்ணவில்லை என தெரிவித்தார்.


You must be logged in to post a comment.