அ.மணக்குடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு! ஏராளமானோர் பங்கேற்பு!…

இராமநாதபுரம்- ஜுலை, 20,  இராமநாதபுரம்     மாவட்டம் ஆர் எஸ்.மங்கலம் ஒன்றியம் மணக்குடி கிராமத்தில் பனைக்குளம்     நாயகி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு வெகு விமரிசையாக நடந்தது . இந்த மஞ்சுவிரட்டு விழாவை முன்னாள் அமைச்சர் வ து நடராஜன் அவர்கள் துவக்கி வைத்தார்கள் இவ்விழாவிற்கு .    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர்  வ.து.ந.ஆனந்த்   தலைமை வகித்தார்.

மஞ்சுவிரட்டில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன 40 மாடுபிடி வீரர்கள் மஞ்சுவிரட்டு விளையாட்டில் பங்கேற்று காளைகளை அடக்கினர்.   இந்த மஞ்சுவிரட்டு விளையாட்டில் மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு குக்கர், பித்தளை  பாத்திரங்கள் ,  பீரோ உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் உடனடியாக விழா குழுவினரால் வழங்கப்பட்டது .விளையாட்டில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு.    பரிசுகள் வழங்கப்பட்டது இவ்விழாவில் டாக்டர் மதிவாணன் உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர் இதனைத்தொடர்ந்து இரவில் நடந்த   அன்னதான விழாவில் மணக்குடி    மற்றும்சுற்று வட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர். அன்னதானம் மற்றும் விழா ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் குடும்பத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!