வக்பு சொத்துக்களை ஆக்கிரமிக்கும் நபர்களை தண்டிக்க இருந்த கடுமையான தண்டனைகளை இலகுவாக்கி வக்பு சொத்துக்களை ஆக்கிரமிக்க ஒன்றிய அரசின் வக்பு திருத்த சட்டம் 2024 மசோதா வழி வகுக்கின்றது முன்மொழிபட்டுள்ள திருத்தங்கள் வகுப்பின் சுயாட்சியை பறிக்க பாஜக அரசு விரும்புகிறது என்பதை காட்டுகிறது மேலும் வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் தலையிட விரும்புகிறது இந்த வக்பு திருத்த மசோதாவிற்கு தமிழ்நாட்டில் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர் இந்த திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசை கண்டித்தும் திருத்த சட்டத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரு பகுதியாக மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சீனி அகமது தலைமையில் தமுமுக மாவட்ட செயலாளர் இப்னு மாவட்ட செயலாளர் அப்பாஸ் தகவல் தொழில்நுட்ப அணி தாகா மைதீன் உட்பட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

You must be logged in to post a comment.