கடந்த 10-6-2018 ஆம் தேதி இரவு தஞ்சையில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்து பயணித்த தோழர் பெ. மணியரசன் அவர்களை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த சமூக விரோதிகள் வம்படியாக அவரது கையைப் பிடித்திழுத்துக் கீழே தள்ளியுள்ளனர். இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து வாகனத்திலிருந்து சாலையில் விழுந்து காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் இந்த தாக்குதல் பற்றி கேள்வி எழுப்பினார்.
திருட்டுக்காக நடந்த குற்றம் என்றும் குற்றவாளிகளை பிடிக்க போலீசு தரப்பில் தனிப்படை அமைக்கபட்டுள்ளது என வழக்கம் போல் முதல்வர் சொல்லியுள்ளார். நடந்த தாக்குதல் திருட்டுக்காக நடக்கவில்லை என்பதை சம்பவத்தை கூர்ந்து பார்த்தால் புரியும்.
காவிரியில் இந்த ஆண்டும் ஜுன் 12 டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என முதல்வர் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மழை கொட்டி தீர்க்கிறது ஏன் முடியாது? என அறிக்கை விட்டார் தோழர் பெ.மணியரசன். மேலும் கோவையில் புதிய தலைமுறை விவாதத்தை பா.ஜ.க. ஆர்எஸ்.எஸ் தரப்பினர் நடத்தவிடாமல் தடுத்ததுடன் அமீர் மீதும், ஊடகத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்ததையும் கண்டித்தார். இவைகள்தான் தாக்குதலுக்கு காரணம்.
போராடுபவர்கள் மீது பொய் வழக்கு, போராட்டத்தில் பங்கேற்றால் தேசிய பதுகாப்பு சட்டம், 144 தடை உத்திரவை மீறி ஸ்டெர்லைட்டை மூடு என்றால் துப்பாக்கிசூடு படுகொலை, இந்துத்துவாவை எதிர்ப்பவன் தேசதுரோகி என்கின்றன மோடி – எடப்பாடி அரசுகள். இத்தகைய அபாயகரமான சூழ்நிலைமையோடு தோழர் பெ.மணியரசன்
தாக்கப்பட்டதை பொருத்திப் பார்க்க வேண்டும். எனவே தோழர் பெ.மணியரசனை தாக்கியவர்களை மட்டுமல்ல, ஏவியவர்களையும் கைது செய்ய வேண்டும்.
தாக்கப்பட்டதை பொருத்திப் பார்க்க வேண்டும். எனவே தோழர் பெ.மணியரசனை தாக்கியவர்களை மட்டுமல்ல, ஏவியவர்களையும் கைது செய்ய வேண்டும்.மேலும், போராடும் தமிழக மக்களும், ஜனநாயக, முற்போக்கு சக்திகளும், அறிவுத் துறையினரும் ஒன்றுபட்டு இத்தகைய சதிவேலைகளை இனங்கண்டு, முளையிலேயே கிள்ளியெறிய போராட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
காவிரி உரிமை மீட்பு குழுத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது, என பத்திரிகை அறிக்கை வழக்கறிஞர். சி.ராஜுமாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழநாடு அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











