தனியார் நிறுவனம் நிதியில் சாலை? கவுன்சிலர் கடும் எதிர்ப்பு..

இராமநாதபுரம், ஆக.31- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி கூட்டம் இன்று மாலை நடந்தது. சேர்மன் ராஜா தலைமை வைத்தார். செயல் அலுவலர் இளவரசி, துணை சேர்மன் நம்புராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டபம் தோப்புக்காடு பகுதியில் சேதமடைந்த தார் சாலையை அமைத்து தருவதாக தனியார் நிறுவனம் கோரிய அனுமதி குறித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது  கவுன்சிலர் பூவேந்திரன் குறுக்கிட்டு பேசியதாவது, ஒரு தனியார் நபரின் கோரிக்கையை தீர்மானமாக கொண்டு வந்தது தவறு. அத்தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.



நிர்வாக ரீதியாக தீர்க்கமான முடிவு எடுக்க கவுன்சில் கூட்டத்தில் தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. அனைத்து கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் அத்தீர்மானம் ரத்து செய்யப்படும் என செயல் அலுவலர் இளவரசி கூறினார். ஆக.18ல் மண்டபத்தில் நடந்த மீனவர் நல சந்திப்பு மாநாட்டில் ரூ.1000 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி கவுன்சிலர் சாதிக்பாட்ஷா பேசினார். சாலை வசதி, மழைக்கால முன்னேற்பாடு குறித்து கவுன்சிலர்கள் முபாரக், முஹமது மீரா சாகிப் ஆகியோர் பேசினர். கவுன்சிலர்கள் லீலாவதி, ஜெயந்தி, ஜென்னத் ஷகீலா, வாசிம் அக்ரம், முருகானந்தம், ஷைலஜா ஆனந்தி, சீதாலட்சுமி, உமா மகேஸ்வரி, கல்யாணி, மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!