மண்டபம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புதிய நிர்வாகிகள் நியமன கூட்டம்..

மண்டபம் ஒன்றிய  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை   மற்றும் புதிய நிர்வாகிகள் நியமன ஆலோசனைக் கூட்டம் இராமநாதபுரம் ஏபிசி மஹாலில்  வெள்ளிக்கிழமை (06/07:2018) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மண்டபம் ஒன்றிய கழக செயலாளர் ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார்.    மாவட்ட கழக செயலாளர்  வ.து.ந.ஆனந்த்,    இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும் இக்கூட்டத்தில் கழக அமைப்புச்செயலாளர் ஜி.முனியசாமி, கழக மகளிரணி இணை செயலாளர் கவிதா சசிக்குமார்,   இராமநாதபுரம் ஒன்றிய கழக செயலாளர் முத்தீஸ்வரன்,  இராமநாதபுரம் நகர் செயலாளர் ரஞ்சித் குமார்,  இராமேஸ்வரம் முன்னாள் நகர்மன்ற தலைவர் அர்ச்சுனன்,  மாவட்ட  இளைஞர் பாசறை செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட கழக அவைதலைவர் அரிதாஸ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தவமுனியசாமி,  மண்டபம் ஒன்றிய கழக பொருளாளர் கணேசன், மண்டபம் ஒன்றிய கழக அவைத்தலைவர் மலைச்சாமி,  மாவட்ட  அம்மா பேரவை  துணை ச்செயலாளர் அடைக்கலம், கீழ நாகாச்சி ஊராட்சி கழக செயலாளர் காளிதாஸ், உள்ளிட்ட மண்டபம் ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் ஏராளமான  கிளை, ஊராட்சி, நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!