ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் இயங்கி வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைமேலாளர் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ஒருமையில் பேசுவதோடு தான் என்ற அகந்தையுடன் செயல்படுகிறார். இதனால் வாடிக்கையாளர்கள் மனம் நோகக்கூடிய நிலைஉள்ளது.
குறிப்பாக வங்கிக்கு பணம் கட்டுவதற்காக வரும் வாடிக்கையாளர்களை குறிப்பாக மதியம் வருபவர்களை திருப்பி அனுப்புவதோடு, மிகவும் சிடுசிடுப்பாக ஏன் குறிப்பிட்ட நேரத்திற்குள் வரமுடியாதா? என்று விரட்டப்படும் நிலை தொடர்கிறது. குறிப்பாக மத்திய கூட்டுறவு வங்கியில் பல்வேறு சலுகைகளுக்காவும், அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காவும் கிராமப்புறங்களில் வரும் பாமரமக்கள் தொடர்பு வைத்துள்ளனர். அதையே! தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு இவர்படுத்தும் பாட்டினால் கேள்வி கேட்கமுடியாமல் திரும்பி செல்லும் நிலை உள்ளது.
ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள நேரம்வரை வங்கியில் வரவு- சிலவு செய்வதற்கு அனுமதிக்கும்படியும் வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உள்ள தொடர்புபற்றி மேலாளருக்கு அறிவுறை வழங்குமாறு வாடிக்கையாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










