கீழக்கரையில் கடந்த சில தினங்களாக மலேசிய தூதரக அதிகாரிகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இச்சுற்றுப்பயணத்தில் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளை சுற்றிப்பார்த்தனர்.

அவர்களுடைய பயணத்தைப் பற்றி வரலாற்று ஆய்வாளர் அபூ சாலிஹ் கூறுகையில், கீழக்கரையில் இரவு நேரங்களில் நடந்தே சென்று கடைகளயும், உண்பண்டங்களையும் மிகவும் ரசித்ததோடு இல்லாமல், மலேசியாவின் சாயல் அதிகமாக இருப்பதாக வியந்தனர். மேலும் கீழக்கரை வரலாற்று அம்சங்கள் அடங்கிய புத்தகத்தை கீழக்கரை ஆர்வலர்களின் மலேசியா அதிகாரிகள் ஆர்வத்துடன் வேண்டுகோள் வைத்தனர்.


மேலும் மலேசியா தூதரக அதிகாரிகள் கீழக்கரையின் பாரம்பரிய இடங்களை மிகவும் ஆச்சரியத்துடனும், ஆர்வத்துடனும் சுற்றிப்பார்த்தனர். விரைவில் மலேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையான பாரம்பரிய உறவு பற்றிய குறும்படம் எடுக்கும் சம்பந்தமாக மேலும் மலேசிய அதிகாரிகள் கீழக்கரைக்கு வரவிருப்பதாகவும் தெரிவித்தார்கள். மலேசிய தூதரக அதிகாரிகளை கீழக்கரை சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் அபு சாலிஹ் மற்றும் கட்டிட கலை நிபுனர் நூருல் ஹபீப் ஆகியோர் இணைந்து அனைத்து பகுதிகளையும் சுற்றி காண்பித்தார்கள்.



Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









