மக்கள் பாதை சார்பாக இராமேஸ்வரம் பேய்க்கரும்பில் மக்கள் ஜனாதிபதி ஐயா A.P.J.அப்துல் கலாம் நினைவிடத்தில் மூன்றாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது . அதைத் தொடர்ந்து தங்கச்சிமடம் சமுதாய கூடத்தில் கலந்தாய்வு மற்றும் சமூக விழிப்புணர்வு பற்றி விவாதிக்கப்பட்டது. அதில் கிராம சபையில் நமது பங்களிப்பு என்ன?, நமது வாக்கு விற்பனைக்கு இல்லை ஏன்?, லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து, விவசாயிகளையும், இயற்கை வளங்களையும் , மீனவர்களையும் பாதுகாக்க வேண்டும் ஏன்?,சகாயம் அவர்கள் சந்தித்த சவால்கள், மக்கள் பாதை திட்டங்கள் பற்றிய விளக்கங்கள் போன்ற தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் இலங்கை காவல்படை கட்டுப்பாட்டில் இருக்கும் மீனவர்கள் குடும்பத்தை பார்த்து ஆறுதல் சொல்லி நம்பிக்கை வழங்கப்பட்டது. மேலும் மீனவர்கள் முன்பாகவே அரசு அதிகாரியிடம் பேசி, இன்னும் ஒரு வாரத்தில் அந்த 2 மீனவர்கள் தாயகம் அழைத்து வரபடுவார்கள் என உத்திரவாதம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வை இராமநாதபுரம் மாவட்ட ஆழி திட்ட பொறுப்பாளர் அருளானந்த பிச்சை , தங்கச்சிமடம் ஊராட்சி பொறுப்பாளர் தீனா சிறப்பாக ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் நூருல்அமீன், இராவணன் குமார், சரவணக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.





You must be logged in to post a comment.