இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தன்னார்வலர்கள் கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னையில் ஏப்ரல் 2 அன்று நடைபெற இருக்கும் மக்கள் பாதை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தன்னார்வலர்களும் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

மேலும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்துவது, வல்லகுளம் பகுதியில் உள்ள குளத்தை சுத்தப்படுத்துவது, மாவட்டம் தோறும் மரக்கன்றுகள் நடுவது என்று தீர்மானிக்கப்பட்டு களப்பணி ஆற்ற உறுதி மொழி எடுக்கப்பட்டது. மேலும் மக்கள் பாதையின் முதுகுளத்தூர் தொகுதிக்கு சைமனும், திருவாடானை தொகுதிக்கு சரவணக்குமாரும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.


You must be logged in to post a comment.