சகாயம் IAS தலைமையில் மக்கள் பாதை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா – ‘ஏப்ரல் 2’ சென்னையில் நடைபெறுகிறது

சகாயம் ஐ.ஏ.எஸ் இன் வழிகாட்டுதலின் படி, சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ”மக்கள் பாதை” என்ற பெயரில் கடந்த ஆண்டு ஏப்ரலில் இயக்கம் துவக்கப்பட்டு மிக சிறப்பான முறையில் பல்வேறு சமூகப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான இளைஞர் பட்டாளம் இந்த இயக்கத்தில் தன்னை இணைத்து வருகிறது. விவசாயிகள் பிரச்சனை, ஜல்லிக்கட்டு மீட்டெடுப்பு போராட்டம், தமிழர் கலாச்சார பாதுகாப்பு என்று பல்வேறு அறவழி போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறது.

இந்நிலையில் சகாயம் ஐ.ஏ.எஸ் இன் தலைமையில் சென்னை தி. நகரில் எதிர்வரும் ஏப்ரல் 2 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மக்கள் பாதை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சகாயம் ஐ.ஏ.எஸ் இளைஞர்களுக்கான எழுச்சியுரையாற்றுகிறார்.

இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதையின் துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ”நேர்மையின் பாதையில், தமிழ் சமூக மாற்றத்தை நாமே முன்னெடுப்போம். இளைஞர்களே ஓர் அணியில் ஒன்று கூடுவோம். ஒரு நாள் வென்று தீர்வோம். மக்கள் பாதை 2 ஆம் ஆண்டில் தடம் பதிக்கிறது. வா தோழா ! தலைமுறை காக்க வா !! தலை நகர் நோக்கி வா !!!” எனும் முழக்கத்தோடு இளைஞர் பட்டாளத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

சென்னையில் நடைபெறும் மக்கள் பாதை இயக்கத்தின்  இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கு பெற  இங்கு பதிவு செய்யவும்.

http://evoteapp.com/MPEvent.aspx

http://evoteapp.com/MPEvent.aspx

மக்கள் பாதையின் இராமநாதபுரம் மாவட்ட அளவிலான வாட்சப் குழுவில் இணைய கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.

https://chat.whatsapp.com/0WLUvtMrLcLDhzIKWTPw70

சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் மக்கள் பாதை இயக்கம் துவங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட எழுச்சிமிகு வீடியோ காணொளி பதிவு உங்கள் பார்வைக்கு :

https://youtu.be/7QxJ3f20UWg

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

3 thoughts on “சகாயம் IAS தலைமையில் மக்கள் பாதை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா – ‘ஏப்ரல் 2’ சென்னையில் நடைபெறுகிறது

  1. An Event which marks a
    Great vision in creating awareness against Bribery and bundling the social responsibility of our people.

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!