கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி 6 வார்டு பகுதியில் அமைந்துள்ள மகாஜன மேல்நிலைப்பள்ளி இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று வருகிறார்கள் இந்நிலையில் இப்பள்ளிக்குச் செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாகவும் பள்ளமேடுமாகவும் உள்ளதாகவும் இதனால் மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்று வர மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் இது சம்பந்தமாக பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இன்று மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக பள்ளி வளாகம் மற்றும் பள்ளி செல்லும் சாலை முழுவதும் மாணவிகளின் இடுப்பு அளவிற்கு மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து வந்ததால் குழந்தைகளை அழைக்க வந்த பெற்றோர்கள் தங்களை பாதுகாக்கவே தட்டு தடுமாறினார்கள்
இந்நிலையில் நேரம் செல்ல செல்ல சிறு குழந்தைகளின் நெஞ்சு வரை தண்ணீர் வந்ததை பார்த்து அச்சத்துடன் தங்களின் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து வர சென்றது அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது மேலும் இதுபோன்று மழைக்காலங்களில் மாணவ மாணவிகள் டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவாமல் கல்வி பயில பரிசல் வசதி ஏற்படுத்தித் தந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள் மேலும் இது சம்பந்தமாக பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வேதனைப்பட்டார்கள் குறிப்பாக இந்தப் பள்ளியின் அருகில் தான் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளரின் குடியிருப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்று பெய்த ஒரு மணி நேர மழைக்கு இந்த நிலை என்றால் மேலும் 2 மணி நேரம் மழை பெய்திருந்தால் நிலமை மிகவும் கவலைக்குரியதாக மாறி இருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேலாவது பொறுப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள்
You must be logged in to post a comment.