மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில்  1500  ஏழை குடும்பங்களுக்கு மளிகைப்பொருட்கள் வழங்கல் 

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள மேலப்பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு பூமி குழுமம் சார்பில் ரூபாய் 1,900 மதிப்பிலான 10 கிலோ அரிசி, மளிகைப்பொருட்கள், பழங்கள் மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டது. மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் உள்ள 1,500 குடும்பங்களுக்கு பூமி குழுமம் நிறுவனத்தில் நடைப்பெற்ற நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொழிலதிபர்கள் பா.ஜெயக்குமார், சங்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் தேவி சுரேஷ்குமார், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் , வார்டு உறுப்பினர்கள் , பூமி குழும பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு கிராம குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!