கீழக்கரை மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியின் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
இப்பள்ளியின் விளையாட்டு விழா இன்று (03-01-208) காலை 10.00 மணியளவில் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் டாக்டர் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் வரவேற்புரையை மஹ்தூமியா பள்ளி செயலாளர் மீரா சாஹிப் வழங்கினார். நிகழ்ச்சிக்கு அனைத்து ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மஹ்தூமியா மேல்நிலை பள்ளியின் தாளாளர் அகமது முகைதீன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கினார். பள்ளியின் கொடியை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சார்ந்த சீனி அசனா ஏற்றினார். ஒலிம்பிக் கொடியை மஹ்தூமியா மேல்நிலை பள்ளியின் செயலாளர் இஃப்திஹார் ஹசன் ஏற்றி வைத்தார். மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் மரியாதையை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சார்ந்த இப்ராஹிம் கனி ஏற்றுக்கொண்டார்.
ஒலிம்பிக் தீபத்தை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சார்ந்த சதக் முகம்மது ஏற்றி வைத்தார். பழைய குத்பா பள்ளி ஜமாஅத் துணைத் தலைவர் செய்யது அபுதாஹீர் விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் நிறைவாக நன்றியுரையை மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் இராமமூர்த்தி வழங்கினார்.
பின்னார் மாலை 04.30 மணிக்கு மேல் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. பள்ளி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கிராத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் டாக்டர் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் வரவேற்புரையை மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளி அகமது முகைதீன் வழங்கினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக SBI வங்கி மேலாளர் மாணிக்கம் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து ஆண்டறிக்கையை மஹ்தூமியா தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை முகம்மது ரிஸ்வானா மற்றும் மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி ஆகியோர் வழங்கினர். அதைத் தொடர்ந்து மாணவர்கள் கலை நிகழ்ச்சி மற்றும் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் தங்கள் படைப்புகள் மூலம் இளம் விஞ்ஞானிகளாக மத்திய அரசால் அடையாளம் காட்டப்பட்டு 9ம் வகுப்பு மாணவி முகம்மது நஸ்ரின் மற்றும் 7ம் வகுப்பு மாணவி சீனி ஜுஹானா ஆகியோருக்கு INSPIRE AWARD மூலம் கொடுக்கப்பட்ட ரொக்க பரிசு தலா ரூ.10,000/- இரு மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
புகைப்படத்தொகுப்பு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print





























