மகாத்மா காந்தி நினைவு தினம் இந்தியா முழுவதும் அனுசரிப்பு-தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!

மகாத்மா காந்தி நினைவு தினம் இந்தியா முழுவதும் அனுசரிப்பு-தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!

தேசப்பிதா மகாத்மா காந்தி இந்திய திருநாட்டிற்காக எண்ணற்ற பல தியாகங்களை, அர்ப்பணிப்புகளை செய்து இந்தியாவிற்கு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையை பெற்றுத்தந்தார்.

இறுதியில் காந்தி நாதுராம் கோட்சேயால் கொல்லப்பட்டு இவ்வுலகை விட்டு பிரிந்தார். காந்தியை நினைவு கூறும் வகையில்,அவரின் தியாகத்தை போற்றும் வகையில் அவரின் நினைவு தினம் 30.01.2020 இன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பழனி நாடார், தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், மாவட்ட மகளிரணி தலைவி நாகம்மாள், மாவட்ட பொதுச்செயலாளர் ஜேம்ஸ் காங்கிரஸ் பொண் பாண்டியன், செங்கோட்டை முன்னாள் ஒன்றிய தலைவர் சட்டநாதன், நகர சிறுபான்மை பிரிவு தலைவர் கலால் சலீம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளீட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!