மகாரதம் பவனி !பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தி.மலை மாவட்ட காவல்துறை  அறிவிப்பு..

மகாரதம் பவனி !பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தி.மலை மாவட்ட காவல்துறை  அறிவிப்பு..

தி.மலை மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் : மகாரதம் பவனி நாளை போக்குவரத்து நெறிமுறை மற்றும் அறிவுரைகள்..

பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குதல், திலகமிடுதல், ஆசிர்வதித்தல் மற்றும் மிரட்டியும் பணம் வசூலிப்பது குற்றமாகும்.

மகாரத பவனி நடைபெறும் மாட வீதிகளை நோக்கி செல்லக்கூடிய வீதிகளான அசலியம்மன் கோவில் தெரு, பேய் கோபுர 3வது தெரு, பேய் கோபுரம் பிரதான சாலை, கொசமடை தெரு ஆகிய தெருக்களில் வாகனங்கள் நிறுத்தவும், செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.

மாடவிதிகளில் தேர் திரும்புவதற்கு சங்கிலியை இழுத்துச் செல்லவும் எதுவாக(1) கடலை கடை சந்திப்பு (2) வன்னியர் மடம் சந்திப்பு(3) கிருஷ்ணா லாட்ஜ் சந்திப்பு (4) காந்தி சிலை சந்திப்பு ஆகிய சந்திப்புகளில் மக்கள் கூடுவதோ இடையூறாக வாகனங்களை நிறுத்துவதோ கூடாது.

மகாரத பவனி காண வரும் பக்தர்கள் தங்களது குழந்தைகளையும், வயதானவர்களையும், செல்போன், ஆபரணங்கள், மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்களையோ அல்லது பொருட்களையோ கண்டால் உடனடியாக காவல்துறை

அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். மகாரத பவனியின் போது, மாடவிதிகளில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் தேர் மீது சில்லறை காசுகள்,தண்ணீர் பாட்டில்கள், தானியங்கள் உள்ளிட்டவற்றை வீசுதல் கூடாது.

கட்டிடங்கள் மீது ஏறி நிற்பதோ, ஏறி நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது,

மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தாலும் இன்வெண்டரில் இருந்து மின் கசிவு ஏற்படலாம் இருப்பதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். 

வீதிகள் முழுவதும் CCTV கேமரா கண்காணிப்பு இருப்பதால் குற்றம் செயல்களில் ஈடுபடுவார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர் சக்கரங்களை தொட்டு கும்பிடும் நோக்கத்தில் அதன் அருகில் யாரும் செல்லக் கூடாது

பெண்கள் தங்களது ஆபரணங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கரும்பு தொட்டில் வேண்டுதலை நிறைவேறும் பக்தர்கள் தேர்பவனியின் போது மாடவிதிகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

பக்தர்கள் நான்கு கோபுரங்களுக்கு முன்போ கிரிவலப் பாதையிலோ எங்கும் கற்பூரம் ஏற்றுதல் கூடாது. பக்தர்கள் தங்களது கால்நடைகளை நான்கு கோபுரங்களுக்கு முன்பும், மாட விதிகளிலும் விடுவதை தவிர்க்கவும், கடைகள் அல்லது காலணி பாதுகாப்பங்களில் விட அறிவறுத்தப்படுகிறது.

உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிவலப் பாதை மற்றும் மாட வீதிகளில் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக அதிக ஒளி எழுப்பும் ஒலிப்பான்களான பீபீ உள்ளிடப்பட்டவற்றை விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் குற்றமாகும். மக்களுக்கு இடையூறாக கிரிவலப்பாதை மற்றும் மாட வீதிகளில் உள்ள நிரந்தர கடைகளில் அதிக ஒலியுடன் கூடிய வியம்பர ஆடியோக்கள் ஒலிபரப்ப தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!