“கைது செய்யப்பட்ட 101 பேரில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை”- மராட்டிய உள்துறை அமைச்சர்..
மராட்டிய மாநிலத்தில் பால்கர் எனும் இடத்தில் பயணத்தில் இருந்த இரண்டு நாடோடி சாமியார்கள் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்கள்.
சாமியார்களைக் கொன்றவர்கள் முஸ்லிம்கள்தாம் என்று சமூக ஊடகங்களில் சங்பரிவார் கும்பல் வழக்கம் போல் வெறுப்புப் பரப்புரையைக் கட்டவிழ்த்துவிட்டது.
இந்த நிலையில் மராட்டிய மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இதுதொடர்பாகக் கூறுகையில்,
“சாமியார்கள் அடித்துக்கொலை செய்யப்பட்ட விஷயத்தில் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை.
ஆகவே இந்த நிகழ்வுக்கு வகுப்புவாத சாயம் பூசுவதை நிறுத்துங்கள்.
அந்தக் கோர விளையாட்டுக்கு இது நேரமல்ல. கரோனாவைப் பிடித்துக் கட்ட வேண்டிய நேரம் இது” என்று குறிப்பிட்டார்.
மராட்டிய மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரேயும் இதை வகுப்புவாத பிரச்னையாகச் சிலர் மாற்ற முனைவதைக் கண்டித்துப் பேசியிருந்தார்.
மாநிலக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சச்சின் சாவந்த் கூறுவது என்ன தெரியுமா?
“கைது செய்யப்பட்டவரில் பலரும் பாஜகவுடன் தொடர்புடையவர்கள். அரசியல் லாபம் ஈட்டுவதற்கும் வகுப்புவாத அரசியலுக்காகவும்தான் இப்படிச் செய்துள்ளனர். சம்பவம் நடந்த பால்கர் தொகுதி கடந்த பத்தாண்டுகளாய் பாஜகவின் கோட்டை” என்று கூறியுள்ளார்..

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









