மதுரை, விக்கிரமங்கலத்தில், ஐந்துபேர் ஆண்டித்தேவர் வகையறா நமச்சிவாய பிள்ளைகள் வகையறா நல்ல பிள்ளைத்தேவர் வகையறாகளுக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ அங்காள ஈஸ்வரி, கருப்புசுவாமி, பரிவார தேவதைகள் ஆலய வீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் கிராமத்தில் நானூறு ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற, ஐந்துபேர் ஆண்டித்தேவர் வகையறா நமச்சிவாய பிள்ளைகள் வகையறா நல்லபிள்ளைத்தேவர் வகையறாகளுக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ அங்காள ஈஸ்வரி, கருப்புசுவாமி, பரிவார தேவதைகள் ஆலயத்தை புதுப்பித்து அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா நடத்த பெரியோர்கள் முன்னிலையில் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது,
இந்த நிலையில் , எட்டூர் கிராமத்திலேயே சிற்ப சாஸ்த்திரம் ஆகம சாஸ்திர முறைப்படி அமைந்துள்ள ஆலயத்திற்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமும் தீர்மானித்து குலம் செழிக்க, குலம் காக்க,மண் வளம் பெறுக வேண்டி பங்காளிகள் முன்னிலையில் சிவாச்சாரியார் கணேச சாஸ்திரிகள்,முரளி கிருஷ்ணாசர்மா தலைமையான குழுவினர் யாக சாலைகள் அமைத்து முதற்கட்டமாக ஜன 18 ம்தேதி பூஜையாக மங்கள இசை, கணபதி பூஜை,நவகிரக வழிபாடு,கோ பூஜை ஹோமம் சங்கல்பம் செய்து மண் எடுத்தல்,காப்பு கட்டுதலுடன்,தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்,
தொடர்ந்து ஜன 19ம்தேதி இரண்டாம் கட்டமாக கும்ப அலங்காரம்,கலா பூர்ணம், அக்னி பிரதிஷ்டை, வேத மந்திரங்கள், மூல மந்திரம் வாசிக்க பூஜைகளில் புஷ்ப ஆராதனையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர், இதனை அடுத்து மூன்றாம் கால பூஜையாக கருப்பு சுவாமி, ஸ்ரீஅங்காள ஈஸ்வரி, பரிகார தெய்வங்களுக்கு பிரணா பிதிஷ்டை காட்டுதல்,சக்தி ஏற்றுதலுடன் யாக பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்,
மங்கள வாத்தியம் இசைக்க வேதமந்திரம் முழங்க புனிதநீர் அடங்கிய கலசத்துடன் யாக சாலையில் இருந்து
புறப்பட்டது பக்தர்கள் மலர் தூவி கோஷம் எழுப்பி, எட்டூர் மக்கள் ஒன்று கூடி வணங்கினர், முதலில் அங்காள ஈஸ்வரி அம்மன் சன்னதி கோபுர கலசத்தில் வேதமந்திரத்துடன் புனித நீரை ஊற்றினர், அப்போது வானில் கருடன் வட்டமிட்டது இதனை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோஷம் எழுப்பி வணங்கினர், தொடர்ந்து பரிகார தெய்வங்களுக்கும், குதிரை மீது வீற்றிருக்கும் கருப்புசுவாமிக்கு புனித நீர் ஊற்றி தீபாராதனை காட்டினர்,பின் தெய்வங்களுக்கு மஞ்சள்,குங்குமம் ,பால்,பன்னீர்,இளநீர்,சந்தனம் என பதினெட்டு வகை திரவியம் கொண்டு அபிஷேகம் செய்து அம்மன், கருப்புசாமி க்கு மலர் அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தினர் இதை தொடர்ந்து மாமன் மச்சான் முறை வகையறாக்கள் கோவிலில் சீர்வரிசை கொண்டு வந்து சிறப்பித்தனர் அவர்களுக்கு ஐந்துபேர் ஆண்டித்தேவர் வகையறா நமச்சிவாய பிள்ளைகள் வகையறா நல்லபிள்ளைத்தேவர் வகையறாகள் மரியாதை செய்து வணங்கினர்,விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், ஐந்துபேர் ஆண்டித்தேவர் வகையறா நமச்சிவாய பிள்ளைகள் வகையறா நல்லபிள்ளைத்தேவர் வகையறாகளுடன் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம மக்கள் செய்து இருந்தனர், விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர், இதனை அடுத்து பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் பிரசாதம், அன்னதானம் வழங்கினர் கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
You must be logged in to post a comment.