தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் இதுவரை 12.65 லட்சம் பேர் மனு அளித்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் நோக்கில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்த்தை கடந்த ஜூலை 15 அன்று முதல்வர் ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கிவைத்தார்.
வருகிற நவம்பர் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நடைபெறும் இந்த திட்டத்தில் மக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கலாம் என்றும் மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதில் 5.88 லட்சம் பேர் மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை கோரி வழங்கப்பட்டுள்ளன. மனு அளித்து 45 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.