மதுரை வெளக்கல் குப்பை கிடங்கில் திடீரென பற்றி எரியும் தீ! சாலையெங்கும் புகைமண்டலமாக காட்சி அளிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம்..
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான வெளக்கல் குப்பை கிடங்கு பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் கொட்டப் பட்டு வருகிறது.
அவற்றிலிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து எடுக்கப்படுகிறது.
மக்காத குப்பைகளை மதுரை மாநகராட்சி குழிதோண்டி அதன் மேல் மண் போட்டு மூடி வைக்கின்றனர்.
மக்கும் குப்பைகளில் உரம் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் கழிவுகள் உள்ள இடத்தில் திடீரென மளமளவென தீ பிடித்து எரியத் தொடங்கியது.
இதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சி ஊழியர்கள் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார், ஜெயகுமார் மற்றும் மகாராஜன், ராஜகுரு உள்ளிட்ட மீட்பு படையினர் விரைந்து வந்து 3 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சமூக விரோதிகள் குப்பை கிடங்கிற்கு தீ வைத்தனரா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் குப்பை கழிவுகள் எரிந்து கரும்புகை மண்டலமாக விமான நிலைய சாலை பெருங்குடி அவனியாபுரம் திருப்பரங்குன்றம் பகுதியில் காட்சியளிக்கிறது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.