மதுரை கொரோனா நிலவரம்.. இதுவரை 60 பேர்.. பல பகுதிகள் தனிமைபடுத்தப்பட்டுள்ளது..

மதுரையில் எஸ்.ஐ., ஏட்டு உட்பட நால்வருக்கு இன்று (25/04/2020) கொரோனா பாதிப்பு உறுதியானது. பாதிக்கப்பட்ட எஸ்.ஐ., பழங்காநத்தத்தை சேர்ந்தவர். தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் பணிபுரிகிறார்.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர். இப்பகுதியில் பணிபுரியும் போலீஸாருக்கு மொத்தமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எஸ்.ஐ.,க்கு கொரோனா உறுதியானது. இதே போல குற்றப்பிரிவு பகுதியை சேர்ந்த 47 வயது போலீஸ் ஏட்டுவிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா தாக்கி தானப்ப முதலி தெருவில் வசிக்கும் மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் 70 வயது தாயார் இறந்தார். இவரது எதிர்வீட்டில் வசிக்கும் 35 வயது ஆணுக்கும் கொரோனா உறுதியானது. இவர் பட்டரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தவர்.

பாதிக்கப்பட்ட இன்னொருவர் செல்லூர் மணவாளன் நகரை சேர்ந்த 21 வயது வாலிபர். சில நாட்களுக்கு முன்பு அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட முதியவரின் உறவினர் ஆவார். அவருடன் தொடர்பில் இருந்ததால் தொற்று ஏற்பட்டுள்ளது. இம்மூவரின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்தநிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது வெளியாட்கள் உள்ளே செல்வதற்கும் அங்கே உள்ளவர்கள் வெளியே வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிருமிநாசினிகள் அடிக்கப்பட்டு வருகிறது. அதே போல் மருத்துவ சுகாதார செவிலியர்கள்  பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களிடம் நோய்த் தொற்று ஏதும் உள்ளதா? காய்ச்சல் சளி மற்றும் வேறு ஏதும் தொந்தரவு உள்ளதா? என ஒவ்வொரு வீட்டுலயும் கேட்டறிந்து, வீட்டில் உள்ள நபர்களை கணக்கெடுத்து, தொலைபேசி எண்ணையும் வாங்கி பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் அப்பகுதி மக்கள் நமது சத்திய பாதை மாத இதழ் கிழை நியூஸ் நிருபரிடம் கோரிக்கைகளை வைத்துள்ளனர். அக்கோரிக்கையானது 14 நாட்கள் எங்களை தனிமை படுத்தி உள்ளார்கள், எங்களுக்கு தேவையான அத்தியாவசியமான உணவு, குடிநீர் மற்றும் பால் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நீங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து உரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து நாங்கள் தகவல் தெரிவிக்கிறோம் என்று அப்பகுதி மக்களுக்கு உறுதி தரப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வார்டு அதிகாரியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் அப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.

மேலும் தன்னார்வலர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கவும், அவர்கள் தேவையான அத்தியாவசியமான பொருட்களை கிடைப்பதற்கு அவர்கள் மூலமாக ஏற்பாடு செய்துள்ளோம் எனவும் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!