மதுரை ஶ்ரீ அரபிந்தோ மீரா யூனிவர்சல் பள்ளி 9வது ஆண்டு விழா அரோபனா இந்தியன் பள்ளி வளாகத்திலநடைபெற்றது.
விழாவுக்கு அரபிந்தோ மீரா பள்ளிக் குழுமம் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார்.
இயக்குனர் அபிலாஷ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் ஐஐடியில் தேர்வான மாணவர்கள் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில்,
எல்லோரும் பள்ளி கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். அந்த வகையில் அரவிந்தோ மீரா யூனிவர்சல் ஸ்கூல் சிறப்பு பெற்றுள்ளது. படிப்பு மட்டுமல்லாமல் பிற திறன்களையும் வளர்ப்பதில் இந்த பள்ளி சிறப்பாக செயல்படுகிறது மகிழ்ச்சி.
பெற்றோர்கள் தங்களது ஆசையை பிள்ளைகளிடம் திணிக்க கூடாது. பிள்ளைகளின் திறமைகளை கண்டறிந்து அதற்கேற்றபடி ஊக்குவிக்க வேண்டும்.
குறிப்பாக மருத்துவராக வேண்டும் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று கோச்சிங் சென்டர் அனுப்பி அவர்களை தொல்லை படுத்த வேண்டாம்.
திறமையுள்ளவர்கள் எப்படி இருந்தாலும் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.
கல்வி ஒன்றே இன்றியமையாதது என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.
மாலையில் நடந்த விழாவில் ஐகோர்ட் நீதிபதி வடமலை, மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். போலீஸ் கமிஷனர் லோகநாதான் பேசுகையில், மாணவர்கள் எதிலும் வெற்றி பெற வேண்டுமானால் கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’ என்று பேசினார்.
விழாவில் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திகாட்டினர். பள்ளி முதல்வர் ஞாணசுந்தரி நன்றி கூறினார். இணை இயக்குனர் நிக்கி புளோரா, தொழிலதிபர்கள் விபின், செந்தில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.