தூங்கா நகரமான மதுரை மாநகர் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாறுதல்கள் அடையும் வகையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகள் முழுவதும் அகற்றப்பட்டு நவீன பேருந்து நிலையமாக 18 மாதங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளன. நகரின் மைய பகுதியில் இருக்கக்கூடிய இந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் அனுதினமும் வந்து செல்லக்கூடிய ஒரு பேருந்து நிலையமாகும்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாறக்கூடிய பேருந்து நிலையம் 18 மாதங்கள் முடிவடைந்த உடன் புதிய பேருந்து நிலையமாக உருவெடுக்க உள்ள நிலையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஆக 9 இடங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது .
திருப்பரங்குன்றம் திருமங்கலம் வாயிலாக செல்லக்கூடிய பேருந்துகள் கேபிஎஸ் ஹோட்டல் அதாவது திருப்பரங்குன்றம் ரோடு வழியாகவும், தெப்பக்குளம் திருப்புவனம் செல்லக்கூடிய பேருந்துகள் crime branch வழியாகவும், சிந்தாமணி வேலம்மாள் மருத்துவமனை நெடுங்குளம் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் மாலை முரசு பத்திரிகை அருகில் இருந்து செல்லும்.
அவனியாபுரம் காரியாபட்டி மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் ஹயாத்கான் தெரு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து செல்லவிருப்பதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அழகர்கோவில் ஊமச்சிகுளம் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் கோட்டை மற்றும் திண்டுக்கல் ரோடு பகுதியில் இருந்தும், ஒத்தக்கடை திருவாதவூர் மேலூர் பகுதியில் செல்லக்கூடிய பேருந்துகள் பாண்டிபஜார் சர்ச் ரயில்வே நிலையம் மேலவெளிவீதி பகுதிகளிலிருந்தும், பாத்திமா கல்லூரி வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு விக்கிரமங்கலம் பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மகபூப்பாளையம் மதுரை ரயில்வே மேற்கு வாயில் வழியாக கிளம்பும்.
மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் செக்கானூரணி உசிலம்பட்டி மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் எல்லீஸ் நகர் பகுதியில் இருக்கக்கூடிய மீனாட்சி அம்மன் கோவில் பார்க்கிங் அருகில் இருந்தும், எம்ஜிஆர், அண்ணா ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் மதுரை பழங்காநத்தம் /நடராஜ் தியேட்டர் அருகில் இருந்தும் பைபாஸ் ரோடு பகுதிகளில் இருந்தும் கிளம்பும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக ேமலான் இயக்குநர் சேனாதிபதி அவர்கள் வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










