கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு மதுரை வளையங்குளம் பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மாபெரும் சமபந்தி அன்னதானம்..

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு மதுரை வளையங்குளம் பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மாபெரும் சமபந்தி அன்னதானம்..

400 ஆண்டுகளுக்கு மேலாக சித்திரை திருவிழாவினை முன்னிட்டு வலையங்குளம் கிராமத்தில் இந்த சமபந்தி அன்னதான நிகழ்வு நடைபெற்று வருகிறது.

வலையன்குளம் கிராமத்தில் உள்ள தானாக முளைத்த தனிவிங்க பெருமாள்கோயிலில் பெண்கள் வாசலிலேயே நின்று தரிசனம் செய்வது. பொது மந்தையில் செருப்பு அணியாமல் இன்றும் பாரம்பரியத்தை கடைபிடிக்கின்றனர்.

மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் நேற்று மதுரை ஆளும் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் வைபோகம் நடைபெற்றது.

அதை அடுத்து இன்று அதிகாலை திருத்தேரோட்டம் நடைபெற்று வந்தது. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நாளை அதிகாலை நடைபெற உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த வளையங்களும் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தானாக முளைத்த தனிலிங்கபெருமாள் சுவாமி கோயிலில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு விடிய விடிய மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் அதை அடுத்து பொதுமக்கள் திரி எடுத்து நள்ளிரவில் வைகை ஆற்றுக்கு சென்று அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் பங்கேற்பது வழக்கம்.

கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு மேலாக வலையங்குளம் கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக சித்திரை பௌர்ணமி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வினை முன்னிட்டு வலையங்குளம் கிராமத்தில் இந்த மெகா விருந்து நிகழ்வு நடைபெறும்.

50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மெகா விருந்து நிகழ்விற்கு சமயலுக்கு அரிசி 2 ஆயிரத்து250 கிலோ, துவரம் பருப்பு ஆயிரம் கிலோ, மற்றும் கத்திரிக்காய், வாழைக்காய், முருங்கை காய், பீன்ஸ், கேரட், , அவரை காய், வாழைக்காய் என 5 டன் அளவில் சேகரிக்கப்பட்டு சமையல் செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு பூஜையுடன் மெகா விருந்து தொடங்கியது.

இந்த சமபந்தி அன்னதானம் முடிந்த உடன் இரண்டு நாட்கள் கழித்து மழை பெய்யும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை என்று கூறப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!