இரு சக்கர வாகனத்தில் வந்தாலே பறிமுதல் மதுரை போலீசார் நாளை முதல் அதிரடி அறிவிப்பு!

இரு சக்கர வாகனத்தில் வந்தாலே பறிமுதல் மதுரை போலீசார் நாளை முதல் அதிரடி அறிவிப்பு!

காவல்துறை தங்களின் நலனில் இதுவரை எடுத்த அனைத்து நடைமுறைக்களுக்கும் ஒத்துழைப்பு தந்து கொரோனா பரவலை குறைக்க உதவியவர்களிடம் மட்டும் மதுரை மாநகர் காவல் துறை சற்று மன்னிப்பு கோருகிறது…

ஒரு சிலரின் புரிதல் இல்லாத நடப்பிற்கும் அறிவுகெட்ட நடவடிக்கைக்கும் அத்தியாவசியமில்லா அலைச்சலுக்கும் முற்றுப்புள்ளிவைத்து மதுரையின் கொரோனா மீழ்விற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் மதுரை மாநகர் காவல் ஆணையரின் அறிவுரையின் பேரில் ஒரு சில கட்டுப்பாடுகள் நாளை முதல் நடைமுறை படுத்தப்படவுள்ளது..

எடுக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைத்துப்பு கொடுத்து கொரோனா மீள்விற்கு வழிவகை செய்ய கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்..

நாளை முதல் உங்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள்., மாளிகைப்பொருட்கள்., மருந்தகம்., ஆகிவற்றிக்கு செல்வதற்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்..

அருகில் உள்ள உங்கள் பகுதி கடைகளிலிலே உங்களின் தேவைகளை நடந்து சென்று பூர்த்தி செய்து கொள்ளவும்..

இதனை மீறிய உங்களின் பயணம் வருந்த தக்கதாக அமையும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்….. #தங்களின் வாகனம் மாதக்கணக்கில் காவல்துறையின் கண்காணிப்பில் தங்களிடம் இருந்து பறிமுதல் செய்து தனிமை படுத்தப்படும்….

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!