கீழை நியூஸின் செய்தி எதிரொலியாக பழங்காநத்தம் ESI மருத்துவமனையில் தங்குதடையின்றி கிடைக்கும் மருந்து மாத்திரைகள்..
கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் பழங்காநத்தம்ESI மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு என நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரி மருத்துவர் G காளீஸ்வரி நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது. சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு மறுநாளே அனைத்து மருந்துகளும் கிடைக்க ஏற்பாடு செய்து விட்டோம். இப்பொழுது தங்குதடையின்றி மருந்துகள் கிடைக்கின்றன எனவும் தகவல் தெரிவித்தார். மேலும் அங்கு வந்த நோயாளிகளிடம் கேட்டறிந்த போது அவர்களும் மருந்துகள் மாத்திரைகள் தங்கு தடையின்றி கிடைக்கின்றது எனவும் தெறிவித்தனர். உண்மையை பகிரங்கப்படுத்தி செய்திகள் வெளியிட்டு நிர்வாகத்த சரி செய்த கீழை நியூஸ் (சத்திய பாதை மாத இதழுக்கு) மக்கள் நன்றியை தெரிவித்தனர். மேலும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நுழைவாயிலில் கிருமிநாசினி கையில் தெளிக்கப்பட்டு கையை சுத்தப்படுத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். பின் மருத்துவர்கள் முதல் அலுவலர்கள் வரை முக கவசம் மற்றும் கையுறை அணிந்து நோயாளிகளுக்கு மருந்து மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். மருந்து சீட்டைக் கொடுத்த பிறகு கிருமி நாசினி கொண்டு கைகளை மீண்டும் சுத்தப்படுத்திய பிறகே வெளியே செல்ல அனுமதிக்கிறார்கள். இது நல்ல முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
செய்தியாளர் வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









