துப்புரவு பணியாளர்களுக்கு விளக்கமாறு கூட கொடுக்காமல் வேலை வாங்கும் தனியார் நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பாரா மாநகராட்சி ஆணையர்.?
பணியாளர்களுக்கு போதிய உபகரணமும் மற்றும் முக கவசம் இல்லாமல் சாலையில் உள்ள மணலை அள்ளும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள்.
மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளது இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பல பகுதிகளில் சாலையில் அமைந்துள்ள மணல்களை ஒப்பந்த ஊழியர்கள் அகற்றுகிறார்கள், இவர்களுக்கு ஒப்பந்த நிறுவனமானது மணல் அள்ளுவதற்காக போதிய உபகரணம் வழங்கவில்லை எனவும் முக கவசம் கொடுக்கவில்லை எனவும் மண்ணை அள்ளுவதற்கு விளக்கமாறு (தொடப்பம்) வாடகைக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஓசி வாங்கி வந்து பணிகளை செய்து வருகிறோம் என குற்றச்சாட்டு வைக்கின்றனர். பொதுவாக இது போன்ற வேலை செய்யும் மாநகராட்சி ஊழியர்களுக்கு தூசி மணல் உள்ளிட்டவை மூக்கின் வழியாக நுரையீரலை பாதிக்கும் ஏற்படுத்தும் சாதாரண அட்டையை வைத்து மணலை அள்ளுவதால் நெகம் வழியாகவோ நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் கை உறை இல்லாமல் மனஅலைகள் மணலுக்கு அடியில் உள்ள கண்ணாடி முள்கள் உள்ளிட்டவை கையில் குற்றும் போது அதை ரத்தத்துடன் கலக்கும் பொழுது பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலைக்கு ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆளாகும் அபாயம் உள்ளது. இதைக் களைய மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உரிய பாதுகாப்பு அம்சம் இல்லாமல் இதுபோன்ற பணிகளை மேற்கொள்வது கொத்தடிமை போல அவர்கள் நடத்துவது மிக வேதனையாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாநகராட்சி ஆணையாளர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.