மதுரை திருமங்கலம் நான்கு வழி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பி.எம்.சி மெகா பிஸ் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவை இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளை பேரன் சிதம்பரம் துவக்கி வைத்தார். மேலும் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். உடன் சிறப்பு விருந்தினர்கள் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், ராஜாக்கூர் சபி சிறப்புரையாற்றினார்கள். மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் 350 நாட்களாக தொடர்ந்து இலவச உணவு வழங்கி வரும் நட்சத்திர நண்பர்கள் தலைவர் குருசாமிக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை பி.எம்.சி எக்ஸிகியூடிவ் டைரக்டர் கோபிஷன் சேர்மேன் அருள் மகேஷ், இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பிரவின் ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்வில் திரளான தொழில் முனைவோர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.