மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய சரகம், யா.ஒத்தக்கடை மிராஸ் காம்ப்ளக்ஸில் உள்ள லட்சுமி கிளினிக்கில், சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து அபிஜித் பிஸ்வாஷ் (40)த/பெ அம்பிக் பிசஷ்வாஷ் என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே முடித்துவிட்டு எவ்வித கல்வித் தகுதியும் இல்லாமல் ஆங்கில மருத்துவம் செய்ததாக தகவல் தெரிய வந்துள்ளது. இதில், இன்று காலை 12.30 மணிக்கு யா.ஒத்தக்கடை காவல் நிலையத்தில் சுகாதார துறை சார்பில் ஒப்படைத்துள்ளனர். இது சம்பந்தமாக யா.ஒத்தக்கடை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.